Kogilavani / 2021 மார்ச் 03 , பி.ப. 03:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.கிருஸ்ணா
சம்பள நிர்ணய சபையினூடாக தீர்மானிக்கப்படும் சம்பளத்தொகையை முதலாளிமார் சம்மேளனம் வழங்கத் தயார் என்று தெரிவித்த சம்மேளனத்தின் ஊடகப் பேச்சாளர் ரொஷான் ராஜதுரை, இரண்டு ஒப்பந்தங்களின் கீழ் செயற்பட முடியாது என்றும் எனவே, கூட்டுஒப்பந்தத்திலிருந்து விலகவுள்ளதாகவும் தெரிவித்தார்.
'கூட்டொப்பந்ததில் 300 நாட்களுக்கு வேலை வழங்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. இப்போது நாளொன்றுக்காக அடிப்படை சம்பளம் என்ற அடிப்படையில் மட்டுமே வழங்க முடியும் எதிர்காலத்தில் பெருந்தோட்ட தொழிற்றுறை வீழ்சியடைந்தால் தொழிற்சங்கங்களும் அரசாங்கமுமே பொறுப்புக்கூற வேண்டும்' என்றும் சுட்டிக்காட்டினார்.
டிக்கோயா தரவளை முகாமையாளர் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்துரைத்த அவர்,
தாங்கள் ஒருபோதும் சம்பள அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றும் பெருந்தோட்ட தொழிலாளர்களின் ஆயிரம் ரூபாய் கோரிக்கையை தொழிற்சங்கங்கள் முன்வைத்தபோது 2019 ஆம் ஆண்டே தாங்கள் ஆலோசனையொன்றை கூட்டொப்பந்த தொழிற்சங்கங்களிடம் முன்வைத்ததாகவும் தெரிவித்தார்.
'வெறுமனே சம்பளத்தை அதிகரிக்க முடியாது. எனவேதான் தொழில்முறையில் சில ஆலோசனைகளை முன்வைத்தோம். அந்த ஆலோசனைகள் ஏற்றுக்கொள்ளபட்டிருந்தால் ஆயிரம் ரூபாய்க்கு மேற்பட்ட சம்பளத்தை தொழிலாளர்கள் பெற்றிருக்க முடியும்.
'தற்போது சம்பள நிர்ணய சபையினூடாக சம்பளவுயர்வு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதனை நாங்கள் வழங்க தாயார். அந்தத் தொகை எங்களுக்கு மட்டுமல்ல சிறுதோட்ட உடமையாளர்களாக இருக்கும் நான்கு இலட்சத்து ஐம்பதாயிரம் பேருக்கும் வழங்க வேண்டும். இரண்டு ஒப்பந்தங்களின் கீழ் செயற்பட முடியது. எனவே கூட்டொப்பந்ததிலிருந்து விலகவுள்ளோம்.
கூட்டொப்பந்தத்தில் தொழிலாளர்களின் சம்பளமட்டுமல்ல அவர்களின் சுகாதார நலன் விடயங்களிலும் பல்வேறு விடயங்களை செய்து வந்தோம். இந்த நலத்திட்டங்கள் அவர்களுக்கு இனி கிடைக்காத நிலை தோன்றியுள்ளது. அதேபோன்று கூட்டொப்பந்த உடன் படிக்கையானது தொழிலாளர்களுக்கு சாதகமானதாகவே இருந்தது. எதிர்காலத்தில் பெருந்தோட்டத் தொழிற்றுறை வீழ்சியடைந்தால், அதற்கான பொறுப்பினை தொழிற்சங்கங்களும் அரசாங்கமே ஏற்க வேண்டும்' என்றார்.
33 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
1 hours ago
1 hours ago