2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

கொட்டாஞ்சேனை துப்பாக்கி சூடு ; இருவர் கைது

Janu   / 2025 மே 18 , மு.ப. 11:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொட்டாஞ்சேனை, சுமித்ராராம பகுதியில் கடந்த 16 ஆம்  திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் மற்றும் மோட்டர்சைக்கில் ஓட்டுநர் கைது செய்யப்பட்டதாக கொட்டாஞ்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்கள் கொழும்பு - 13 பிரதேசத்தை சேர்ந்த  17,18 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

துப்பாக்கிச் சூட்டில் 42 வயதுடைய ஒரு ஆணும் அவரது பெரியம்மாவான  70 வயதுடைய பெண் ஒருவரும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் இருவரும் , சட்டத்தரணி ஒருவர் மூலம் கொட்டாஞ்சேனை பொலிஸாரிடம் சரணடைந்த பின்னர், இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X