2026 மார்ச் 19, வியாழக்கிழமை

கட்டார் இளவரசருடன் ஜனாதிபதி தொலைபேசி கலந்துரையாடல்

Freelancer   / 2026 மார்ச் 19 , மு.ப. 08:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

கட்டார் இளவரசர் ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானிக்கும், இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும் இடையில் தொலைபேசி கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

கட்டாரின் தற்போதைய நிலைமை குறித்து இதன்போது ஜனாதிபதி விசாரித்ததோடு, கட்டார் மற்றும் பிராந்தியத்தின் ஏனைய நாடுகளுக்கு எதிராகத் தொடரும் ஆக்கிரமிப்பின் பின்னணியில், இலங்கையின் ஒற்றுமையையும் ஆதரவையும் வெளிப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கட்டாரிலுள்ள இலங்கை சமூகத்தினரின் நல்வாழ்வு குறித்து, கட்டார் இளவரசர், ஜனாதிபதிக்கு உறுதியளித்துள்ளார்.

தனது எல்லைக்குள் வசிக்கும் அனைவர் மீதும் அரசு அக்கறையும் கவலையும் கொண்டுள்ளது என்றும் கட்டார் இளவரசர் கூறியுள்ளார்.

இராணுவ மோதல் அதிகரிப்பு மற்றும் அதன் நேரடி விளைவுகளால் எரிசக்தித் துறை மற்றும் விநியோகச் சங்கிலிகளில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் உள்ளிட்ட பிராந்தியம் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்தும் இருவருக்கும் இடையில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

சர்வதேச ஒருங்கிணைப்பு மற்றும் ஒத்துழைப்பின் மூலம் இந்த சவால்களை எதிர்கொள்வதன் முக்கியத்துவத்தை ஜனாதிபதி இதன்போது வலியுறுத்தியுள்ளார்.

அசாதாரண சூழ்நிலைகள் மற்றும் தற்போதைய சவால்கள் இருந்தபோதிலும், ஒரு நம்பகமான எரிசக்திப் பங்காளராகத் தனது பங்கிற்கு கட்டார் கொண்டுள்ள அசைக்க முடியாத உறுதிப்பாட்டையும், எரிசக்தி விநியோகத்தின் தொடர்ச்சியையும் கிடைப்பதையும் உறுதி செய்வதில் அதன் அர்ப்பணிப்பையும் கட்டார் இளவரசர் உறுதிப்படுத்தியுள்ளார். (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .