2025 ஒக்டோபர் 19, ஞாயிற்றுக்கிழமை

கொட்டாவி விட்டு வாயை மூட முடியாமல் தவித்த இளைஞன்

S.Renuka   / 2025 ஒக்டோபர் 19 , பி.ப. 02:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

கன்னியாகுமரி-அசாம் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த இளைஞன், வழக்கம்போல் கொட்டாவி விட்டுள்ளார். இவ்வாறு கொட்டாவி விட்ட இளைஞனால் மீண்டும் வாயை மூடி இயல்பு நிலைக்கு வர முடியாமல் கடும் சிரமப்பட்டுள்ளார். மேலும் தான் அனுபவிக்கும் கஷ்டத்தை கூட அவரால் வாயால் பேசி சொல்ல முடியவில்லை.

இதையறிந்து அதிர்ச்சி அடைந்த சக பயணிகள், ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளர். இதனையடுத்து, பாலக்காடு ரயில்வே மருத்துவமனையின் மருத்துவ அதிகாரி  சென்று, சம்பந்தப்பட்ட இளைஞனுக்கு உடனடி சிகிச்சை அளித்துள்ளார். இதையடுத்து அந்த இளைஞன் வாய் மூடி பேசிய நிலையில், இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளார். தொடர்ந்து அதே ரயிலில் அந்த இளைஞன் பயணம் செய்து தனது ஊருக்கு திரும்பியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .