2021 மே 14, வெள்ளிக்கிழமை

’கடந்த அரசாங்கம் கைவிட்டதை செய்யுங்கள்’

S. Shivany   / 2021 மார்ச் 01 , பி.ப. 05:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த அரசாங்க காலப்பகுதியில் கைவிடப்பட்ட நகர அபிவிருத்தி திட்டங்கள் பலவற்றை, மீள ஆரம்பிப்பதற்கு நிதி மற்றும் நகர அபிவிருத்தி, வீடமைப்பு அமைச்சர் என்ற வகையில்  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ  அதிகாரிகளுக்கு இன்று (01)  அறிவுறுத்தியுள்ளார்.

நிதி அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே, பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அதன்போது நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் கீழ் செயற்படுத்தப்படவிருந்த மற்றும் இதுவரை ஆரம்பிக்கப்பட்டுள்ள அபிவிருத்தி திட்டங்களின் முன்னேற்றம் குறித்து பிரதமர் மதிப்பாய்வு செய்தார்.

பல அபிவிருத்தி திட்டங்கள் கடந்த அரசாங்கத்தின் ஐந்து ஆண்டு காலப்பகுதியில் கைவிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள்  பிரதமருக்கு சுட்டிக்காட்டினர்.

அவ்வாறு செயற்படுத்தப்படாது கைவிடப்பட்டுள்ள திட்டங்களை மீள ஆரம்பிக்குமாறு   பிரதமர் அறிவுறுத்தினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .