Freelancer / 2026 ஜனவரி 02 , மு.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ். வடமராட்சி கிழக்கு மருதங்கேணியில் குடும்பஸ்தர் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
தவனேசன் (வயது 40) என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் நேற்று பிற்பகல் 5 மணியளவில் மருதங்கேணி வீரபத்திரர் கோவிலை அண்மித்த பகுதியில் இடம்பெற்றுள்ளது
கொலை செய்யப்பட்டவர் மருதங்கேணி பகுதிக்கு சென்றுகொண்டிருக்கும்போது வழிமறித்து கத்திக் குத்து மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கத்தி குத்துக்கு இலக்கானவரை மருதங்கேணி மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அங்கு அவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவரை மருதங்கேணி பொலிஸார் கைது செய்துள்ளனர். (a)
5 minute ago
8 minute ago
12 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
8 minute ago
12 minute ago