Freelancer / 2025 டிசெம்பர் 31 , மு.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ். தாளையடி கடலில் நண்பர்களுடன் நீராடச் சென்ற நிலையில் காணாமல்போன இளைஞர், இரண்டு நாள்களின் பின்னர் சடலமாகக் கரையொதுங்கியுள்ளார்.
உடுத்துறையைச் சேர்ந்த உதைப்பந்தாட்ட வீரரான 27 வயதுடைய ஜெசிந்தன் என்ற இளைஞரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்
மேற்படி இளைஞர் கடந்த ஞாயிற்றுக்கிழமை நண்பர்களுடன் தாளையடி கடலில் நீராடிக்கொண்டிருந்த வேளை கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல்போனார்.
இதனையடுத்து கடந்த இரண்டு நாட்களாக இளைஞரை அந்தப் பகுதியைச் சேர்ந்த கடற்றொழிலாளர்கள், கடலில் தேடிய நிலையில் இன்று திங்கட்கிழமை அவரின் சடலம் அந்தப் பகுதியில் கரையொதுங்கியுள்ளது.
இது தொடர்பில் மருதங்கேணி பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டதையடுத்து, பொலிஸார் சடலத்தை மீட்டு உடற்கூற்றுப் பரிசோதனைக்காக வைத்தியசாலையில் சடலத்தை ஒப்படைத்துள்ளனர். (a)
4 hours ago
8 hours ago
31 Dec 2025
31 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
8 hours ago
31 Dec 2025
31 Dec 2025