2025 செப்டெம்பர் 27, சனிக்கிழமை

கடலில் விழுந்த இளைஞர் உயிரிழப்பு

Freelancer   / 2025 செப்டெம்பர் 27 , மு.ப. 08:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ். மண்டைதீவுக் கடலில் மீன்பிடிக்கச் சென்றபோது கடலில் விழுந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் சாவற்காடு ஆனைக்கோட்டையைச் சேர்ந்த சிவரத்தினம் சந்தோஸ் (வயது 17) என்பவராவார்.

நேற்று வெள்ளிக்கிழமை (26) அதிகாலை சிறிய தந்தையுடன் மீன் பிடிக்க சென்று மண்டைதீவில் கடலில் விழுந்தத நிலையில் யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது உயிரிழந்துள்ளார்.

இம் மரணம் தொடர்பில் யாழ். மாவட்ட திடீர் மரண விசாரணை அதிகாரி ஆறுமுகம் ஜெயபாலசிங்கம் விசாரணைகளை மேற்கொண்டார். சாட்சிகளை மானிப்பாய் பொலிஸார் நெறிப்படுத்தினர்.

நீரில் மூழ்கி மரணம் சம்பவித்ததாக பிரேத பரிசோதனையில் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .