2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

கடலுக்கு குழந்தை பலி, மனைவி தப்பினார், கணவன் தலைமறைவு

Kanagaraj   / 2015 செப்டெம்பர் 18 , மு.ப. 04:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொஸ்கொட பிரதேசத்தில் நபர் ஒருவர் தனது மனைவி மற்றும் பிள்ளையை கடலில் தள்ளிவிட்டதன் பின்னர் அவர் தப்பிச்சென்றுவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொஸ்கொட மாபெல்லே எனுமிடத்தில் உள்ள கற்பாறைக்கு குழந்தையும் மனைவியையும் அழைத்து சென்ற கணவன் அவ்விருவரையும் அங்கிருந்து கடலுக்குள் தள்ளிவிட்டுள்ளார்.

அவரது மனைவி கரைக்கு நீந்திவந்து உயிரை காப்பாற்றி கொண்டுள்ளார். எனினும்,  இரண்டரை வயதுடைய குழந்தை தொடர்பில் தகவல் வெளியாகவில்லை.

காப்பாற்றப்பட்ட மனைவி சிகிச்சைக்காக பலபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று தெரிவித்த பொலிஸார் தப்பிச்சென்ற கணவனை தேடி வலைவிரித்துள்ளதாக தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X