2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

கடலில் முழ்கி சிறுவன் பலி

Sudharshini   / 2015 செப்டெம்பர் 19 , மு.ப. 08:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எஸ்.எம்.யாசீம்,எப்.முபாரக்  

திருகோணமலை, இறக்ககண்டி காந்தி நகர் கடற்கரையில் விளையாடிக்கொண்டிருந்த நசீர் முகம்மத் ஹாசீர் என்ற 15வயது சிறுவன், இன்று (19) காலை கடலில்; முழ்கி உயிரிழந்துள்ளான் என குச்சவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

கண்டியிலிருந்து திருகோணமலைக்கு சுற்றுலாச் சென்றிருந்த கண்டி, அரபிக்கல்லூரி மாணவர்கள், இன்று (19) கடற்கரையில் பந்து விளையாடிக்கொண்டிருந்த போது, பந்து கடல் அலையால் இழுத்துச் செல்லப்பட்டதாகவும் அதை எடுக்க முயற்சித்த போதே குறித்த சிறுவன் நீரில் முழ்கி உயிரிழந்துள்ளான் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

பிரேத பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை குச்சவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0

  • sivanathan Saturday, 19 September 2015 10:03 AM

    கடலில் மூழ்கி உயிரிழந்தவர்நதீர் முகமட் ராசிக் வயது 13. கண்டி மகாநாம கல்லூரியில் சிங்கள மொழிமூலமான மாணவன்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X