Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kanagaraj / 2016 ஜனவரி 11 , மு.ப. 01:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடல் மற்றும் வாவியில் குளித்த மற்றும் தவறி விழுந்ததில் மூவர், நீரில் மூழ்கிப் பலியாகியுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.
காலி முகத்திடல் கடலில், கடந்த 10 ஆம் திகதி மாலை 5 மணியளவில் குளித்துக்கொண்டிருந்த மாளிகாவத்தையைச் சேர்ந்த 16 வயதான மொஹமட் ஹர்ஷாட் என்ற இளைஞனே கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
இதேவேளை, காலி முகத்திடலில் கடலில் மூழ்கியவரை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது, அவ்விடத்துக்கு வந்திருந்த, மாளிகாவத்தையை வசிப்பிடமாகக் கொண்ட 34 வயதான சிந்தக சமீர என்பவர், காலிடறி, கடலுக்குள் விழுந்து பலியாகியுள்ளார்.
இதேவேளை, அம்பலாங்கொடை பிரதேசத்தில், வாவியொன்றில் குளித்துக்கொண்டிருந்த 63 வயதான நபரொருவர், நீரில் மூழ்கிப் பலியாகியுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .