2025 நவம்பர் 27, வியாழக்கிழமை

கிண்ணியா பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் விபத்தில் பலி

Editorial   / 2025 நவம்பர் 27 , மு.ப. 10:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹஸ்பர் ஏ ஹலீம்

கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிண்ணியா கொழும்பு பிரதான வீதியின் வில்வெலி பகுதியில் இடம் பெற்ற வாகன விபத்தில் கிண்ணியா பிரதேச சபையின் 
முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ஸ்தலத்தில் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் வியாழக்கிழமை (27) இடம் பெற்றுள்ளது. கிண்ணியா சூரங்கல் பகுதியை சேர்ந்த வயது (56) மதிக்கத்தக்க இப்னு எனும் குடும்பஸ்தர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

லொறி ஒன்றுடன் மோதியதில் மோட்டார் சைக்கிளில் வந்தவரே உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X