Editorial / 2026 மார்ச் 24 , பி.ப. 04:13 - 0 - {{hitsCtrl.values.hits}}

கனகராசா சரவணன்
கொக்கட்டிச்சோலை பிரதேசத்தில் கணவனால் தீ வைக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வந்த குடும்பப் பெண், இரண்டு மாதங்களின் பின்னர் செவ்வாய்க்கிழமை (24) உயிரிழந்துள்ளதாக கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்தனர்.
கொக்கட்டிச்சோலை, முனைக்காடு, நாகதம்பிரான் கோவில் வீதியைச் சேர்ந்த 31 வயதுடைய மயில்வாகனம் இன்பமலர்தேவி என்பவரே இவ்வாறு துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளார்.
குடும்பத் தகராறு காரணமாகக் குறித்த பெண்ணின் மீது அவரது கணவர் கடந்த ஜனவரி மாதம் 17 ஆம் திகதி தீ வைத்துள்ளார். இதில் படுகாயமடைந்த பெண் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். சுமார் 10 நாட்கள் வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்ற அவர், பின்னர் வீடு திரும்பியிருந்தார்.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை (24) அன்று காலை அவர் தனது வீட்டில் உயிரிழந்துள்ளதை அடுத்து, சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாகக் பெண்ணின் கணவர் கடந்த ஜனவரி மாதம் 20 ஆம் திகதி கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். தற்போது பெண் உயிரிழந்துள்ள நிலையில், இந்த வழக்கு தொடர்பான மேலதிக விசாரணைகளைக் கொக்கட்டிச்சோலை பொலிஸார் தீவிரப்படுத்தியுள்ளனர்.
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago