Janu / 2026 ஜனவரி 19 , மு.ப. 11:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுமார் 3 கோடியே 40 இலட்சம் ரூபாய் பெறுமதியுடைய 397 கைத்தொலைபேசிகளை சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வந்து கிரீன் சேனல் ஊடாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து வெளியேறிக்கொண்டிருந்த இலங்கை விமான பயணி ஒருவர் ஞாயிற்றுக்கிழமை (18) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் கொழும்பு , தெமட்டகொடை பகுதியைச் சேர்ந்த 45 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
அவர், இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் முறையான அனுமதியின்றி, கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளிடம் அறிவிக்காமல், இந்த கைத்தொலைபேசிகளை நாட்டிற்குள் கொண்டு வந்துள்ளார்.
சந்தேக நபர் ஞாயிற்றுக்கிழமை (18) காலை 07.00 மணி அளவில் துபாயில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் UL-226 மூலம் வந்துள்ளதுடன் அவரது பயணப் பையை சோதனையிட்ட போது ஆப்பிள் மற்றும் சம்சங் வகை கைத்தொலைபேசிகள் தொகை மீட்கப்பட்டுள்ளது.
கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள், சந்தேக நபரை தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
டி.கே.ஜி. கபில

அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .