2025 ஜனவரி 19, ஞாயிற்றுக்கிழமை

காதலிக்கு கோல் எடுத்த காதலன் கைது

Editorial   / 2023 ஓகஸ்ட் 16 , பி.ப. 03:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

தன்னுடைய காதலிக்கு கோல் எடுத்த காதலனை பொலிஸார் கைது செய்துள்ள சம்பவமொன்று கண்டி, கட்டுகஸ்தோட்டையில் இடம்பெற்றுள்ளது.

நன்றாக கசிப்பு அருந்திவிட்டே காதலியையும் அவளுடைய சகோதர்களையும் காதலன் நடுசாமத்தில் திட்டிக்கொண்டிருந்துள்ளார்.

கட்டுகஸ்தோட்டை பொலிஸ் பிரிவின் ஊழல் ஒழிப்பு பிரிவு அதிகாரிகள் , இரவு ரோந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது ,  ​​கண்டி மாவில்மட பிரதேசத்தில் வீதியோரத்தில் முச்சக்கர வண்டி ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது.

அதிருந்த  ஒருவர் கடுமையான தூசன வார்த்தைகளால் திட்டிக்கொண்டிருப்பதை பொலிஸ் அதிகாரிகள் கண்டுள்ளனர்.

போத்தலில் இருந்த கசிப்பை குடித்துக்கொண்டே தொலைபேசியில்  திட்டிக்கொண்டிருந்ததை பொலிஸ் அதிகாரிகள் அவதானித்தனர்.

சுமார் 30 வயது மதிக்கத்தக்க அவரிடம் விசாரித்த போது, இரவில் தனது காதலியை சந்திக்க அவரது வீட்டிற்கு வந்ததாகவும்இ அப்போது அளவுக்கு அதிகமாக காசிப்பு குடித்ததால் , காதலியின் சகோதரர்கள் அவரை அடித்து உதைத்ததாகவும் தெரியவந்தது.

அதன்பின்,  முச்சக்கரவண்டியை சாலையோரம் நிறுத்திவிட்டு, காதலிக்கு போன் செய்து,  போத்தலில் இருந்த கசிப்பையும் குடித்துவிட்டு,  காதலியையும் , அவரது சகோதரர்களையும் திட்டியதாக தெரிவித்துள்ளார்.

சந்தேகநபரிடம் இருந்த   போத்தலில் 750 மில்லி லீற்றர் கசிப்பு எஞ்சியிருந்ததுடன் , சட்டவிரோத மதுபானம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டார்.  

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கண்டி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X