2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

கனகராயன்குளம் விபத்தில் வெளிநாட்டு பிரஜை பலி

Editorial   / 2025 செப்டெம்பர் 19 , பி.ப. 02:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

க. அகரன்

கனகராயன்குளம் பகுதியில் வெள்ளிக்கிழமை (19) இடம்பெற்ற விபத்தில் ஜெர்மன் நாட்டை சேர்ந்த  ஒருவர் பலியாகியுள்ளார்.

குறித்த விபத்து தொடர்பாக மேலும் தெரிய வருகையில்….

கொழும்பில் இருந்து யாழ்  நோக்கி சென்று கொண்டிருந்த பாரவூர்தி வவுனியா கனகராயன்குளம் பகுதியில் அதே திசையில் சென்று கொண்டிருந்த போது துவிச்சக்கர வண்டியில் மோதியுள்ளது. இதில், துவிச்சக்கர வண்டியில் பயணித்து கொண்டிருந்த நபர் கீழே விழுந்துள்ளார்.

விபத்தில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த நபர் படுகாயமடைந்த நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

அவர் ஜேர்மன் நாட்டில் இருந்து வருகை தந்து கனகராயன்குளம் பகுதியில் தங்கியிருந்த நிலையில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்துடன் தொடர்புடைய பாரவூர்தியின் சாரதி கனகராயன்குளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், விபத்து தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X