2025 ஒக்டோபர் 15, புதன்கிழமை

கோப்பாய் பொலிஸ் நிலையம் அகற்றப்பட்டுள்ளது

Janu   / 2025 ஒக்டோபர் 15 , பி.ப. 01:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

காணிகள் , வீடுகளை விட்டு பொலிஸார் வெளியேற்றப்பட்டு, தமது காணிகள் மற்றும் வீடுகளை தம்மிடம் ஒப்படைக்குமாறு, யாழ். மாவட்ட நீதிமன்றில் கடந்த 2019ஆம் ஆண்டு கால பகுதியில் 07 உரிமையாளர் வழக்கு தொடர்ந்தனர்.

வழக்கு விசாரணைகள் கடந்த 06 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் 27ஆம் திகதி பொலிஸார் தனியார் காணிகள் வீடுகளை உரிமையாளர்களிடம் மீள ஒப்படைத்து விட்டு, வெளியேற வேண்டும் என  மாவட்ட நீதிபதி சி.சதீஸ்கரன் உத்தரவிட்டார்.

 எனினும் இரண்டு மாதங்களுக்கு மேலாகியும் இதுவரை பொலிஸார் காணியை உரிமையாளர்களிடம் கையளிக்கமையால் இன்று (15) குறித்த வீடுகள் அவற்றின் உரிமையாளர்களுக்கு நீதிமன்ற  பதிவாளரினால்  வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

கோப்பாய் பொலிஸ் பிரிவு மக்களது முறைப்பாடுகள்  இருப்பின் அதனை யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையம் தற்காலிகமாக ஏற்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .