2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

கிரைண்டர் பிளேட் குத்தப்பட்டு மாணவன் உயிரிழப்பு

Janu   / 2025 ஜூலை 13 , மு.ப. 10:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிரைண்டரின் பிளேட் உடைந்து மார்பில் குத்தப்பட்டு, பாடசாலை மாணவன் ஒருவன்  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் வெள்ளிக்கிழமை (11) அன்று  உயிரிழந்துள்ளதாக கடான பொலிஸார் தெரிவித்தனர்.

கடான பிரதேசத்தைச் சேர்ந்த டி.எஸ். சஞ்சீவ அலஹகோன் என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த மாணவனின் பெரியப்பா கிரைண்டர் மூலம் சேவைகளை வழங்கும் தொழிலை நடத்தி வருவதுடன் அவர் இல்லாத போது, மாணவன் கிரைண்டர் மூலம் பி.வி.சி பைப்பை வெட்டிக் கொண்டிருந்ததாகவும் இதன் போது கிரைண்டரின் பிளேட்டின் ஒரு பகுதி உடைந்து மாணவனின் மார்பில் ஊடுருவி உள்ளே சென்றுள்ளதாகவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.  

சடலத்தின் பிரேத பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை  கடான  பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .