Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 02, புதன்கிழமை
Niroshini / 2021 மே 05 , பி.ப. 05:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில், தொற்றுநோய் வைத்தியசாலையில் (ஐ.டீ.எச்) அனுமதிக்கப்பட்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர்.
மாலபே - கோணவத்த பிரதேசத்தைச் சேர்ந்த கணவன் - மனைவியும் அதே குடும்பத்தைச் சேர்ந்த மற்றுமொரு பெண்ணுமே, இவ்வாறு உயிரிழந்துள்ளனர் என்று, தலங்கம பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு உயிரிழந்தவர்கள், 86 - 94 மற்றும் 82 வயதுகளையுடையவர்கள் என்றும் உயிரிழந்த ஆண், முன்னாள் நகரசபை உறுப்பினர் ஒருவர் என்றும் அவரது மனைவி, ஓய்வுபெற்ற தாதி என்றும் மற்றைய பெண், அவர்களுடைய உறவினர் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.
இவர்கள், ஏப்ரல் மாதம் 22ஆம் திகதியன்று, ஐ.டீ.எச்இல் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், இம்மாதம் 3ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இவர்களுக்கான இறுதிக் கிரியைகள் நடந்து முடிந்துள்ளன என்று தெரிவித்த சுகாதாரத் துறையினர், மேற்படி உயிரிழந்த தம்பதியின் மகள், மருமகன், பேரன் ஆகியோரும் தொற்றுக்குள்ளான நிலையில், ஐ.டீ.எச்இல் சிகிச்சை பெற்று வருவதாகக் கூறினர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .