Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை
Editorial / 2019 பெப்ரவரி 25 , மு.ப. 05:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பும் அதனை அண்டிய பகுதிகளிலிருந்தும், கடந்த 2008 - 2009ஆம் ஆண்டுக் காலப்பகுதியில், 11 இளைஞர்கள் கடத்தப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்ட விவகாரம் தொடர்பில், முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொடவைக் கைதுசெய்யவுள்ளதாக, பொலிஸ் தலைமையகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இச்சம்பவம் தொடர்பில், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தால் இதுவரையில், கடற்படை அதிகாரிகள் 12 பேர் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ள நிலையில், இந்த விவகாரம் தொடர்பில் வழக்குத் தொடருமாறு, சட்ட மா அதிபரால் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
இதன் பிரகாரம், அட்மிரல் கரன்னாகொடவிடம் வாக்குமூலமொன்றைப் பெற்றுக்கொள்வதற்காக, கடந்த 21 மற்றும் 22ஆம் திகதிகளில், கிருளப்பனை, பெத்தகான பிரதேசங்களில் அமைந்துள்ள கரன்னாகொடவின் வீடுகளுக்கு, பொலிஸார் சென்றுள்ளனர். கடற்படைத் தளபதியாக, கரன்னாகொட கடமையாற்றிய காலப்பகுதியில், கடற்படைச் செயலாளராகக் கடமையாற்றிய ரியல் அட்மிரல் ஷியாமல் பெர்ணான்டோ வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே, கரன்னாகொடவை கைதுசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago
6 hours ago
8 hours ago