R.Tharaniya / 2025 டிசெம்பர் 01 , பி.ப. 02:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் கொரியக் குடியரசின் இலங்கைத் தூதுவர் மேன்மை தங்கிய மியான் லீக்கும் (Miyon lee) இடையிலான விசேட சந்திப்பொன்று இன்று (01) கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
தற்போதைய பேரிடர் சூழ்நிலையால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு உடனடி நிவாரணம் பெற்றுக் கொடுக்கும் நோக்கில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இந்த சந்திப்பை மேற்கொண்டதோடு, தற்போதைய பேரிடர் சூழ்நிலையால் பாதிப்பைச் சந்தித்திருக்கும் இலங்கைக்கு உதவிகளைப் பெற்றுத் தருமாறும் எதிர்க்கட்சித் தலைவர் கொரிய தூதரிடம் கோரிக்கை விடுத்தார்.
வெள்ளம் வடிந்த பிற்பாடு, ஏற்படக்கூடிய பேரிடருக்குப் பிந்தைய தொற்றுநோய் சூழ்நிலைகளை எதிர்கொள்ள நாட்டின் சுகாதார சேவைகளை மேலும் பலப்படுத்தப்பட வேண்டும் என்றும், பல வைத்தியசாலைகளின் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டதாலும், ரயில் மற்றும் வீதிப் போக்குவரத்து பாதைகள் கட்டமைப்புகள் பாதிக்கப்பட்டதாலும், இவற்றை புனர்நிர்மாணிக்க வேண்டிய தேவை காணப்படுவதனால், இதற்குத் தேவையான உதவிகளை இலங்கைக்குப் பெற்றுத் தருமாறு எதிர்க்கட்சித் தலைவர் மேலும் கேட்டுக்கொண்டார்.
நீண்டகால நெருங்கிய நட்பு நாடாக, கொரிய குடியரசு எமது நாட்டின் திறமையான ஆற்றல் மிக்க இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்புகளைப் பெற்றுத் தந்ததுபோல, இச்சந்தர்ப்பத்திலும் ஒரு நாடாக மீண்டும் எழுந்து நிற்கத் தேவையான பக்க பலத்தை எமக்குப் பெற்றுத் தருமாறு கொரிய தூதரிடம் கோரிக்கை விடுத்தார்.
18 minute ago
26 minute ago
26 minute ago
27 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
26 minute ago
26 minute ago
27 minute ago