2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

கர்ப்பிணியின் உயிரிழப்புக்கு நஷ்டயீடு கோரி வழக்கு

Princiya Dixci   / 2015 நவம்பர் 24 , மு.ப. 07:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏழு மாதக் கர்ப்பிணி உயிரிழந்தமைக்கு காரணம் வைத்தியரின் கவனயீனம் எனத் தெரிவித்து அதற்கு சுமார் 400 மில்லியன் ரூபாய் நஷ்டயீடு வழங்குமாறு கோரி, உயிரிழந்த பெண்ணின் கணவன் கம்பளை நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.

கம்பளை, நரங்விட வைத்தியசாலையின் வைத்தியர்கள் 07 பேர் மீதும் தாதியர் இருவர் மீதும் இவ்வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

இவ்வழக்கு விசாரணைக்காக வைத்தியர்கள் எழுவரையும் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 08ஆம் திகதியும் தாதியர் இருவரையும் எதிர்வரும் மார்ச் மாதம் 8ஆம் திகதியும் நீதிமன்றத்துக்கு சமுகமளிக்குமாறு கம்பளை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

குறித்த கர்ப்பிணிப் பெண், கடந்த 2013ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 25ஆம் திகதி சுவாசாக் கோளாறு காரணமாக கம்பளை, நரங்விட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இவரின் நோய்த்தன்மை குறித்த வைத்தியர்களோ, தாதியர்களே ஆரம்பத்திலேயே ஆராய்வதற்கு முன்வரவில்லை எனவும் பல மணிநேரம் சென்ற பின்னரே வைத்தியர்கள் சிகிச்சையளிக்க முன்வந்தனர் எனவும் எனினும், மனைவியையோ அல்லது கற்பத்தில் இருந்த சிசுவையோ காப்பாற்ற முடியவில்லையெனவும் கணவன் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .