2026 ஜனவரி 16, வெள்ளிக்கிழமை

குற்றக் கும்பல் பெண் துபாயில் கைது

Editorial   / 2026 ஜனவரி 16 , மு.ப. 10:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

துபாயில் கைது செய்யப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த இருவரும், அரச நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்ட பெண் ஒருவரும் மீண்டும் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

குற்றச்செயல்களில் ஈடுபட்டு வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றவர்களைக் கைது செய்யும் விசேட நடவடிக்கையின் கீழ் இவர்கள் துபாயில் வைத்து அந்நாட்டு பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டனர்.

இதனையடுத்து, அவர்கள் வௌ்ளிக்கிழமை (16)  அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தினூடாக நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர் என காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X