2025 ஜூலை 17, வியாழக்கிழமை

கற்பிட்டி பிரதேச வான்பரப்பில் மர்ம ட்ரோன் கமெரா?

Editorial   / 2019 ஏப்ரல் 28 , மு.ப. 10:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜூட் சமந்த

கற்பிட்டி பிரதேசத்துக்குள் கடந்த சில தினங்களாக பல்வேறு சந்தர்ப்பங்களில் பறக்கும்  ட்ரோன் கமெரா தொடர்பான விசாரணைகளை ​இன்று காலை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

குறித்த ட்ரோன் கமெராவானது கடந்த 3 நாள்களாக அடிக்கடி நுரைச்சோலை அனல் மின்நிலையம், கற்பிட்டி கடற்படை முகாம், வனாத்தவில்லு கடற்படை முகாம்களுக்கு மேலே பறந்துள்ளதுடன், இன்று அதிகாலையும் இந்த ட்ரோன் கமெரா பறந்ததாக பிரதேசவாசிகளும், கடற்படையினரும் தெரிவித்துள்ளனர்.

மிகவும் வேகமாக பறக்கும் இது ட்ரோன் கமெரா அல்லது ஆளில்லா விமானமாக இருக்கலாம் என்றும் சில சந்தர்ப்பங்களில் குறித்த இயந்திரத்தை துப்பாக்கியால் சுட்டப் போதிலும் வேகமாகப் பயணிப்பதால், இதற்கு எவ்வித சேதமும் ஏற்படவில்லை என்றும் கடற்படைத் தகவல்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை இலங்கையில் தற்போது ட்ரோன் கமெரா, ஆளில்லாத விமானங்களைப் பறக்கவிடுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், கற்பிட்டி பிரதேசத்தில் பறக்கும் இந்த ட்ரோன் தொடர்பில் விசேட சோதனை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதென, புத்தளம் பொலிஸ் நிலையதிகாரி ஜே.ஏ. ஜயகொடி தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X