2024 ஒக்டோபர் 12, சனிக்கிழமை

கால்களை காணொளியாக்கிய இருவர் கைது

Janu   / 2024 செப்டெம்பர் 29 , பி.ப. 03:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் கால்களை காணொளியாக பதிவு செய்து அதனை சமூக வலைத்தளங்களில்  பகிர்ந்த இரு இளைஞர்கள் (29) ஞாயிற்றுக்கிழமை அன்று கைது செய்யப்பட்டதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் சிலாபம் பங்கதெனிய மற்றும் குமாரக்கட்டுவை பகுதிகளை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது .

குறித்த இளைஞர்கள் வேறொரு முறைப்பாட்டின் விசாரணைகளுக்காக கடந்த 27 ஆம் திகதி பொலிஸ் நிலையத்திற்கு வந்திருந்த நிலையில் , கடமையில் இருந்த பெண் பொலிஸ் உத்தியோகத்தரின் கால்களை காணொளியாக பதிவு செய்து அதனை சமூக வலைத்தளங்களில்  வெளியிட்டுள்ளனர் .

சமூக ஊடகங்களில் தனக்கு அவமானம் ஏற்படுத்தும் வகையில் காணொளி வெளியிடப்பட்டுள்ளதாக கூறி பாதிக்கப்பட்ட பெண் பொலிஸ் அதிகாரி, உயர் அதிகாரிகளிடம் முறைபாடு செய்த பின்னர் விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார் சந்தேகத்தின் பேரில் இருவரையும் கைது செய்துள்ளனர் .


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .