2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

கலாநிதி செந்தூரன் மகேஸ்வரனுக்கு விருது

Janu   / 2025 ஓகஸ்ட் 24 , மு.ப. 09:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

16 ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கை, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய பல்தேசிய நிறுவனங்களில், தரக்கட்டுப்பாடு, மற்றும் பொறியியல் முகாமைத்துவம்  ஆகியவற்றில் மேற்கொண்ட சிறந்த பங்களிப்புகளுக்காக கலாநிதி. செந்தூரன் மகேஸ்வரனுக்கு 'உலகளாவிய பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்தில் மிகவும் மதிப்பு வாய்ந்த நிபுணருக்கான 2025 விருது' வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இவ்விருது வழங்கும் விழா கடந்த ஆவணி 17ஆம் திகதி  கொழும்பு கோல்ஃபேஸ் ஹோட்டலில் நடைபெற்றது. இதில், பேராசிரியர்கள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், கல்வியியலாளர்கள், பல்துறை சாதனையாளர்கள், ஊடகவியலாளர்கள், திரை நட்சத்திரங்கள் மற்றும் இலங்கைக்கான மிஸ் யூனிவேர்ஸ் 2024 உட்பட பலர் 'வைர விருதுகள் 2025' விருது வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.

கோப்பாய் வடக்கை பூர்வீகமாகக் கொண்ட கலாநிதி செந்தூரன் மகேஸ்வரன் அவர்கள், இளைப்பாறிய இலங்கை வங்கி முகாமையாளர் திரு. மகேஸ்வரன் மற்றும் திருமதி யாழினியின் புதல்வர் ஆவார்.

யாழ்.இந்துக்கல்லூரியின் பழைய மாணவரான இவர், பொறியியலில் இளங்கலையும், பொது முகாமைத்துவம் மற்றும் சர்வதேச திட்ட நிர்வாகத்தில் இரட்டை முதுமாணியும், வட அமெரிக்காவில் கணனி மற்றும் இலத்திரனியல் பொறியியலில் கலாநிதி பட்டமும் பெற்றுள்ளார்.

மேலும் இவர், ஐ.எஸ்.ஓ தணிக்கையாளர்களின் சர்வதேச பதிவு மற்றும், ஐக்கிய ராச்சியத்தின் பட்டய தர நிர்ணய‌ நிறுவகத்தால் அங்கீகரிக்கப்பட்ட, சர்வதேச தரச்சான்றிதழ் வழங்கும் உரிமத்தை பெற்ற தலைமை அதிகாரியும் ஆவார். அவை தவிர, ஆஸ்திரேலியாவின் பொருளாதாரம் மற்றும் அமைதிக்கான நிறுவனத்தின் இலங்கைக்கான சமாதான தூதுவராகவும் செயற்படுகிறார்.

இவரின் ஆராய்ச்சிகள் சர்வதேச பத்திரிகைகளிலும், சர்வதேச ஆராய்ச்சி மாநாடுகளிலும் இடம்பெற்றுள்ளதுடன், இவை பொறியியல் உலகில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் இவர் சிறந்த பொறியியல் மற்றும் புகழ்பெற்ற ஆராய்ச்சிக்கான‌ கவுரவ விருதுகள் 2025 (சிறந்த சர்வதேச கல்வியாளர்கள் விருது), ஆராய்ச்சி மற்றும் பொறியியலில் சிறந்த பங்களிப்புக்கான அரேபிய வர்த்தக சம்மேளனத்தின் விருதையும், சிறந்த பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான சர்வதேச வணிக விருதுகள் 2025 மற்றும் 2026 இற்கான ஆசியாவின் கவுரவ விருது மற்றும் ஆசியாவின் வாழ்நாள் சாதனையாளர் விருதுகளையும் வென்றுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X