2021 மே 11, செவ்வாய்க்கிழமை

கல்வி அமைச்சின் விசேட அறிவிப்பு

R.Maheshwary   / 2021 ஏப்ரல் 18 , பி.ப. 01:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாளை (19) தொடக்கம் நாட்டின் அனைத்து பாடசாலைகளினதும் இரண்டாம் தவணை பாடசாலை கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாகும் நிலையில், இது தொடர்பில் கல்வி அமைச்சு விசேட அறிவிப்பொன்றை வெ ளியிட்டுள்ளது.

அதற்கமைய, வகுப்பறையில் காணப்படும் மாணவர்களின் எண்ணிக்கை 15இற்கு குறைவெனில், சகல மாணவர்களையும் தினமும் பாடசாலைகளுக்கு வரவழைக்க முடியும் என்பதுடன், 16-30 வரையான மாணவர்கள் வகுப்பறைகளில் இருப்பார்களாயின் இரண்டு பிரிவுகளாக அவர்களைப் பிரிக்கவும் 30மோணவர்கள் இருப்பார்களாயின் 3 பிரிவுகளாக பிரித்து மாணவர்களை பாடசாலைகளுக்கு வரவழைக்க முடியுமென, அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா அறிக்கை மூலம் குறிப்பிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X