Freelancer / 2024 நவம்பர் 04 , மு.ப. 02:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
நூருல் ஹுதா உமர்
காலம் காலமாக பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை தன்னகத்தே வைத்திருந்த கல்முனை, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சகோதரர் எச்.எம்.எம். ஹரீஸ் தேர்தலில் போட்டியிட அனுமதி மறுக்கப்பட்டதன் ஊடாக தனக்கான பிரதிநிதித்துவத்தை இல்லாமலாக்க பாரிய சதி ஒன்றை அரங்கேற்றியுள்ளனர் என புதிய ஜனநாயக முன்னணியில் போட்டியிடும் கலாநிதி ஏ.எம். ஜெமீல் தெரிவித்தார்.
சாய்ந்தமருது பொலிவேரியன் கிராமத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்ார்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஷுக்கு துரோகம் இழைக்கப்பட்டு உள்ளதை அறிந்து, கல்முனைக்கான பிரதிநிதித்துவத்தின் அவசியத்தை உணர்ந்த நான், புதிய ஜனநாயக முன்னணியின் ஊடாக எனக்குக் கிடைத்த சந்தர்ப்பத்தை சகோதரர் ஹரீஷுக்கு வழங்கி கல்முனையை அழகு பார்க்க விரும்பினேன். என்றாலும் அவர் மனதளவில் உடைந்திருந்ததால் என்னை களத்தில் இறங்குமாறும் எனக்கு உதவுவதாகவும் கூறினார். அதன் பின்னரே இறுதி நேரத்தில் கையொப்பமிட்டு தேர்தலில் குதித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
நமது பிராந்தியம் பல்வேறு தேவைகளை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறது. மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றுவது என்றால் மக்களின் சார்பில் சிறந்த பிரதிநிதிகள் பாராளுமன்றத்துக்கு செல்ல வேண்டும். தற்போது களத்தில் இறங்கியுள்ளவர்களுடன் என்னையும் ஒப்பிட்டு நான் சிறந்தவன் என்றால் எனக்கு வாக்களியுங்கள். கடந்த காலங்களில் எனக்குக் கிடைத்த அதிகாரங்களை வைத்து இந்த பிராந்தியத்துக்கு பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் உள்ளிட்ட பல விடயங்களை செய்துள்ளேன். அத்துடன் நமது பிராந்தியத்தில் பாரிய பல்கலைக்கழகம் ஒன்று உருவாக மறைந்த தலைவருடன் இணைந்து பணியாற்றியுள்ளேன் என்றும் தெரிவித்தார்.
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago