R.Tharaniya / 2025 மே 18 , மு.ப. 10:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் வாவியில் இன அழிப்பு வாரத்தை நினைவு கூர்ந்து மின் விளக்குகள் அலங்கரிக்கப்பட்டு இன அழிப்பின் அடையாளமான முள்ளிவாய்க்கால் தூபியினை கொண்ட புகைப்படங்கள் மற்றும் கறுப்பு ,சிவப்பு. மஞ்சள் கொடிகள் ஏற்றப்பட்டு மிதக்கும் வகையில் அமைக்கப்பட்ட இரண்டு தூபிகள் சனிக்கிழமை (17) அன்று இரவு 9 மணியளவில் மிதந்து வந்ததை அடுத்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
குறித்த பாலத்தின் வாவி ஊடாக சம்பவ தினமான சனிக்கிழமை (17) இரவு 9.00 மணி அளவில் மின் விளக்குகள் ஒளிர்ந்து கொண்ட நிலையில் இரு மிதக்கும் வகையான இன அழிப்பு நினைவாக தயாரிக்கப்பட்ட தூபிகள் மிதந்து முகத்து வாரத்தை நோக்கி சென்று கொண்டிருந்ததை கண்ட மக்கள் இரவில் மின் விளக்குகள் ஒளிர்ந்த வண்ணம் மனிதர்கள் இன்றி இரு சிறிய படகுகள் போல மர்மமான பொருள் வாவியில் ஒரு மணித்தியாலம் மிதப்பதை கண்டதையடுத்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது
இதையடுத்து அங்கு வந்த புலனாய்வு பிரிவு பொலிஸார் அதை மீட்பதற்கான நடவடிக்கையினை முன்னெடுத்த நிலையில் அந்த மர்மான படகுகள் முகத்துவாரம் நோக்கி வாவியில் நகர்ந்து கொண்ட நிலையில் டச் பார் பகுதி வாவிக் கரையில் அமைந்துள்ள மீன்பிடி படகு தயாரிக்கும் கட்டிட பகுதியில் கரையடைந்ததையடுத்து அங்கு சென்ற பொலிஸார் அதனை கரைக்கு இழுத்து கொண்டு வந்து மீட்டனர்.
சுமார் 4 அடி கொண்ட சதுரமான ரெயிபோமில் நடுவில் முள்ளிவாய்க்கால் அமைந்துள்ள நினைவு தூபி போன்ற புகைப்படம் நிறுத்தப்பட்டு அதில் தலைமகனின் வீர வணக்க நாள், இன அழிப்பு வாரம் 12 வைகாசி முதல் 17 வைகாசி வரை, பொங்கு தமிழ் பேரவை என வாசகம் பொறிக்கப்பட்ட அதற்கு அருகில் கறுப்பு ,சிவப்பு. மஞ்சள் கொடிகள் ஏற்றப்பட்டு அதனை சுற்றி மெழுகுதிரி போன்ற வடிவிலான் மின்விளக்குகள் ஒளிரவிட்டு மிதக்கும் முறையில் தயாரிக்கப்பட்டு வாவியில் விடப்பட்டுள்ளது
இந்த இன அழிப்பு நினைவு கூறும் முகமாக வாவியில் மிதக்கும் வகையில் அமைக்கப்பட்ட இந்த நினைவுத் தூபியை யார் அமைத்தது இதனை எங்கிருந்து வாவியில் விட்டார்கள் என தெரியாது அரசாங்க புலனாய்வு பிரிவினர் மற்றும் பொலிஸாரை திக்கு முக்காட வைக்கப்பட்டதுடன் மீட்கப்பட்ட அந்த மிதக்கும் நிலையில் தயாரிக்கப்பட்ட இன அழிப்பு தூபியை பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.
கனகராசா சரவணன்

32 minute ago
39 minute ago
48 minute ago
49 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
39 minute ago
48 minute ago
49 minute ago