2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

கல்வியங்காடு கொலை: 6 பேருக்கு விளக்கமறியல்

Freelancer   / 2023 ஓகஸ்ட் 14 , பி.ப. 07:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

பு.கஜிந்தன்

யாழ்ப்பாணம் - கல்வியங்காடு ஜி.பி.எஸ் விளையாட்டு அரங்கு பகுதியில் உள்ள வீடு ஒன்றில் 
அடிகாயங்களுடன் மீட்கப்பட்ட ஆண் ஒருவரின் சடலம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் ஆறுபேரையும் எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாண நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ.ஆனந்தராஜா உத்தரவிட்டார்.

சம்பவம்  தொடர்பில்  தெரியவருவதாவது,

யாழ்ப்பாணம் - கல்வியங்காடு ஜி.பி.எஸ் விளையாட்டு அரங்கு பகுதியில் உள்ள வீடு ஒன்றில் கடந்த சனிக்கிழமை நிர்வாண நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டது.

09 வயதான சிறுமி ஒருவரிடம் தவறாக நடந்து கொண்டதாகத் தெரிவித்தே, குறித்த நபர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சிறுமியின் தாயாரும் பெரிய தாயாரும் இணைந்து அந்த நபர் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து, சிறுமியின் மாமா உள்ளிட்ட நால்வர் இணைந்து அவரை வேறொரு இடத்திற்கு அழைத்துச்சென்று தாக்கியுள்ளனர்.

பின்னர் குறித்த நபர் அவரது வீட்டிலேயே விடப்பட்ட போதிலும், மறுதினம் காலை அந்த குடும்பஸ்தர் பலத்த காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணை முன்னெடுத்த யாழ்ப்பாணம் விசேட குற்றதடுப்பு உதவிப் பொலிஸ்  பரிசோதகர் மேனன் தலைமையிலான குழுவினரால் கோப்பாய் மற்றும் சிந்தங்கேணி பிரதேசங்களை சேர்ந்த 6 பேரை கைது செய்தனர்.

இவ்வாறு  கைது செய்யப்பட்டவர்கள் ஆறு பேரையும் யாழ்ப்பாண  நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ. ஏ. ஆனந்தராஜா  முன்னிலையில்  இன்று  ஆஜர்படுத்திய போதே விளக்கமறியல் உத்தரவிட்டதுடன்  சிறுமியை தந்தையுடன் செல்ல நீதாவன் உத்தரவிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X