Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Freelancer / 2025 ஜூன் 22 , மு.ப. 02:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
தற்போதைய அரசாங்கத்துடன் இணைந்து மேற்கொண்ட புதிய கல்வி சீர்திருத்தங்களுக்கு ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதிநிதிகள் தங்கள் முழு ஆதரவைத் தெரிவித்துள்ளார்கள்.
கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் பிரதமர் ஹரிணி அமரசூரிய இதனைத் தெரிவித்துள்ளார்.
பிரதமருக்கும், இலங்கைக்கான ஆசிய அபிவிருத்தி வங்கியின் பணிப்பாளர் தகாஃபுமி கடோனோ மற்றும் அதன் ஏனைய பிரதிநிதிகளுக்கு இடையே பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது இந்தக் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன என பிரதமரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த கலந்துரையாடலின்போது, புதிய கல்வி சீர்திருத்தங்களுக்காக ஏற்கனவே எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் பாடசாலை கல்வியில் எதிர்வரும் ஆண்டிற்கான புதிய மறுசீரமைப்பை செயல்படுத்துவது, சம்பந்தப்பட்ட சவால்கள் உள்ளிட்டவற்றை பிரதமர், ஆசிய அபிவிருத்தி வங்கி பிரதிநிதிகளுக்கு விளக்கியுள்ளார்.
இந்த நிலையில், புதிய கல்வி சீர்திருத்தங்களில் ஆசிய அபிவிருத்தி வங்கி திருப்தி அடைந்துள்ளதாக பிரதமரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. (a)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
05 Jul 2025