2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

கல்வி நிலையங்களுக்கு அருகில் சட்டவிரோத மதுபான விற்பனை

George   / 2016 ஒக்டோபர் 14 , மு.ப. 08:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி கனகபுரம், கிளிநொச்சி நகர் ஆகிய பகுதிகளில் பாடசாலைகள் தனியார் கல்வி நிலையங்கள் என்பவற்றை அண்மித்த பகுதிகளில் மிகநீண்டகாலமாக சட்டவிரோதமான முறையில் மதுபான விற்பனைகள் இடம்பெற்று வருவதாகவும் இதனைக் கட்டுப்படுத்த உரிய அதிகாரிகள் இதுவரை எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை எனவும் பொதுமக்களும் வர்த்தகர்களும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இதனால் பல்வேறு கலாச்சார சீரழிவுகள் இடம்பெறுவதுடன் அதிகளவான சிறுவயதுடையவர்கள் இளைஞர்கள் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி வரும் நிலை காணப்படுகின்றது. இவ்வாறான சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

ஆனால், இதனைக் கட்டுப்படுத்த வேண்டிய அதிகாரிகள் இதுவரை எதுவித நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை. கனகபுரம் வீதியில் பொதுச்சந்தைக்கு அண்மித்த பகுதி மற்றும் கனகபுரம் பாடசாலை ஆகிய பகுதிகளிலும் கிளிநொச்சி நகரிலும் சட்டவிரோதமான முறையிலும் மதுபான விற்பனைகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வரும் நபர்கள் பொலிஸாருடன் நெருங்கிய தொடர்புகளை வைத்திருப்பதாகவும் இவ்வாறான செயற்பாடுகள் பொலிசாரின் துணையுடன் இடம்பெற்று வருகின்றது.

நகர மக்கள் வர்த்தகர்கள் சிவில் சமூக பிரதிநிதிகள் பொலிஸாருக்கு குற்றம் சாட்டியுள்ளதுடன் இது தொடர்பாக பொலிஸாருக்கு தகவல்களை கொடுக்கும் போதும் குறித்த சட்டவிரோத மதுபான விற்பனைகளில் ஈடுபடுபவர்களுக்கு இது தொடர்பாக உடனடியாகவே பொலிஸார் தகவல்கள் வழங்கியவரை கூறிவிடுகின்றனர்.

இதனைக்கட்டுப்படுத்த வேண்டியவர்களின் துணையுடன் இவ்வாறான செயற்பாடுகள் முன்னெடுப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .