Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2025 செப்டெம்பர் 10 , பி.ப. 12:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
பெண் ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்த இளைஞரின் கையை வெட்டி பையில் மருத்துவமனைக்கு கொண்டு வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இச்சம்பவம் குறித்து பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தை சேர்ந்தவர் கோபி. இவர் கடந்த சில மாதங்களாக அரக்கோணத்தை அடுத்த அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்து வந்துள்ளார். இதனால் அந்த பெண்ணின் குடும்பத்தில் தொடர்ந்து பிரச்சினைகளும், மோதல்களும் இருந்து வந்ததாக தெரிகிறது. இருப்பினும், இருவரும் உறவை தொடர்ந்து வந்துள்ளனர்.
இந்நிலையில், செப்டம்பர் 8ஆம் திகதி இரவு, வழக்கம் போல அந்த பெண்ணுடன் கோபி பேசிக் கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர், கூர்மையான ஆயுதத்தால் கோபியின் வலது கையை வெட்டி துண்டாக்கியுள்ளார். வலியால் துடித்த கோபி, சாலையிலேயே சுருண்டு விழுந்ததாக தெரிகிறது.
உடனடியாக கோபியை மீட்ட பொதுமக்கள், அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது துண்டான வலது கையை ஒரு கேரிபேக்கில் போட்டு எடுத்துச் சென்றதால் மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், பின்னர் திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் அங்கிருந்து எழும்பூர் அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டார்.
இச்சம்பவம் குறித்து அரக்கோணம் பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், பெண் ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்ததே, கோபி மீதான தாக்குதலுக்கு காரணம் என தெரியவந்துள்ளது. குறிப்பாக, பெண்ணின் தந்தை வடிவேலு, அவரது உறவினரான பிரகாஷ் ஆகியோர் கோபியை மர்மநபரை விட்டு தாக்கியிருக்கலாம் என பொலிஸார் கருதுகின்றனர்.
31 minute ago
48 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
48 minute ago
1 hours ago
2 hours ago