2025 செப்டெம்பர் 12, வெள்ளிக்கிழமை

குளவி கொட்டுக்கு இலக்காகி உயிரிழப்பு

Freelancer   / 2025 செப்டெம்பர் 12 , மு.ப. 08:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

கருங்குளவி கூட்டின் அழகினை கண்டு அதனை தட்டிய வயோதிபமாது ஒருவர் கருங்குளவி கொட்டுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் வித்தகபுரம், தெல்லிப்பளையைச்  சேர்ந்த செல்வநாயகம் பாலசரஸ்வதி (வயது 82) என்ற வயோதிப மாது ஆவார்.

செவ்வாய்கிழமை (09) பிற்பகல் 3.30 மணியளவில் மரத்தால் விழுந்திருந்த தென்னோலையில் பாரிய குளவிக் கூடு ஒன்று காணப்பட்டுள்ளது.

அழகான குளவி கூடாக இருந்ததால் அதற்கு கிட்ட சென்று தடி ஒன்றினால்  கூட்டை தட்டிய போது அதில் இருந்து கலைந்த குளவிகள் கொட்டியதில் பாதிக்கப்பட்ட வயோதிமாது தெல்லிப்பளை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதும்  அவர் அங்கு உயிரிழந்துள்ளார்.

இம் மரணம் தொடர்பில் யாழ். போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார்  விசாரணைகளை மேற்கொண்டார். சாட்சிகளை தெல்லிப்பளை பொலிஸார் நெறிப்படுத்தினர். (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .