2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

களியாட்ட விடுதி தாக்குதல்: விசாரணையில் ஜனாதிபதி தீவிரம்

Princiya Dixci   / 2016 ஒக்டோபர் 13 , மு.ப. 04:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.நிரோஷினி

கொழும்பு, இரவுநேரக் களியாட்ட விடுதியில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பில், பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன், ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவும், பிறிதொரு விசாரணையை முன்னெடுத்து வருவதாக, நாடாளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் வெகுசன ஊடகத்துறைப் பதில் அமைச்சர் கருணாரத்ன பரணவிதான தெரிவித்தார்.  

மேலும், இச்சம்பவத்துடன் தனது மகனுக்கும் தொடர்பு உள்ளது என செய்திகள் வெளிவந்துள்ளமையால், ஜனாதிபதி இது விடயத்தில் விசாரணை நடத்துவதில், மிகவும் தீவிரமாக உள்ளார் எனவும் அவர் குறிப்பிட்டார்.  

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்றுப் புதன்கிழமை (12) இடம்பெற்ற, அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் மாநாட்டின்போது, மேற்படி தாக்குதல் சம்பவம் ​குறித்து, ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது குறித்து தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் கூறியதாவது,  

“கொழும்பில் அமைந்துள்ள இரவுநேரக் களியாட்ட விடுதியில், கடந்த 8ஆம் திகதி நள்ளிரவு வேளையில் தாக்குதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதனுடன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவில் மகனான தஹாம் சிறிசேனவுக்கு தொடர்புள்ளது என்று ஊடகங்கள் வாயிலான பல்வேறு தகவல்கள் வெளிவந்துகொண்டிருக்கின்றன.  

ஆனால், உண்மை எது என்று இன்னும் தெரியவில்லை. இச்சம்பவத்துடன் தனது மகனுக்கு தொடர்பு உள்ளது எனச் செய்திகள் வந்துள்ளமையால், இது விடயத்தில் விசாரணை நடத்துவதில், ஜனாதிபதி மிகவும் தீவிரமாக உள்ளார்.  

அந்தவகையில், இத்தாக்குதலை யார் மேற்கொண்டார்கள் என உடடியாக விசாரணைகள் மூலம் கண்டுபிடிக்குமாறு பொலிஸாருக்கு அவர் உத்தரவிட்டுள்ளார். அதுமட்டுமன்றி, ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவினரும் விசாரணையை முன்னெடுத்து வருகின்றனர். விசாரணைகள் முடிவடையும் இது தொடர்பில் எம்மால் எந்தவொரு கருத்தினையும் முன்வைக்க முடியாது” என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .