2021 ஜூலை 31, சனிக்கிழமை

கொழும்பில் நேற்றிரவு இருவர் திடீர் மரணம்?

R.Maheshwary   / 2020 ஒக்டோபர் 29 , மு.ப. 09:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

நேற்று (28) கொழும்பு தேசிய வைத்தியசாலைக்குள் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்த இருவர் தொடர்பில், பிசிஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்படுவதாக இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

வேறு நோய்கள் காரணமாக குறித்த இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், உயிரிழந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டின் தற்போதைய நிலையில், உயிரிழந்த இருவரின் சடலங்களிலிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட உயிரணு மாதிரிகளை பிசிஆர் பரிசோதனைக்கு அனுப்பியுள்ளதாகவும் இதற்கமைய, இவர்களின் உயிரிழப்புக்கு காரணம் கொரோனா தொற்றா என்பது குறித்து இன்று பகல் தெரிந்துகொள்ளலாம் என்றம் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .