2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

கொழும்பு, தெஹிவளையில் 2 ஆண்களின் சடலங்கள் மீட்பு

Simrith   / 2025 செப்டெம்பர் 30 , மு.ப. 11:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிராண்ட்பாஸ் மற்றும் தெஹிவளையில் நேற்று வெவ்வேறு சம்பவங்களில் இரண்டு ஆண்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து, பொலிஸார் விசாரணைகளைத் தொடங்கியுள்ளனர்.

முதல் உடல் கிராண்ட்பாஸில் உள்ள இங்குருகொடை சந்திக்கு அருகில் கண்டெடுக்கப்பட்டது. உயிரிழந்தவர் இன்னும் அடையாளம் காணப்படவில்லை என்றும், அவர் 35 முதல் 40 வயதுக்குட்பட்டவர் என்றும், சுமார் 5 அடி 4 அங்குல உயரம் கொண்டவர் என்றும், கருப்பு ஷார்ட்ஸ் மற்றும் கருப்பு டி-சர்ட் அணிந்திருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர். உடல் பரிசோதனைக்காக கொழும்பு தேசிய மருத்துவமனையின் பிணவறைக்கு கொண்டு செல்லப்பட்டது.

மற்றொரு சம்பவத்தில், தெஹிவளை, சிறிவர்தன வீதியில் உள்ள ஒரு வீட்டினுள் 23 வயதுடைய ஒருவர் இறந்து கிடந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X