Editorial / 2025 நவம்பர் 11 , பி.ப. 01:07 - 0 - {{hitsCtrl.values.hits}}

கோவை ராமநாதபுரத்தில் 65 வயது நபர், தன்னுடைய மனைவியுடன் வசித்து வருகிறார்.சமீபத்தில் இந்த நபரை, செல்போனில் யாரோ அழைத்து பேசியிருக்கிறார்கள்.
போனில் பேசியவர், மும்பையில் உள்ள பாதுகாப்பு அமைச்சகத்தில் இருந்து பேசுவதாக தன்னை அறிமுகம் செய்து கொண்டுள்ளார்..
தொடர்ந்து பேசும்போது, "உங்கள் ஆதார் நம்பரை வைத்து வங்கி கணக்கை சோதனை செய்தோம், அதில், பயங்கரவாதிகளுக்கு பலமுறை நீங்கள் பணம் அனுப்பியிருப்பது தெரியவந்துள்ளது. இதனால் உங்களுக்கு பயங்கரவாதிகளுடன் தொடர்பு இருப்பதாக சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது.. எனவே நாங்கள் உங்கள் பேங்க் அக்கவுண்ட்டை கணக்கை ஆய்வு செய்ய வேண்டும்" என்று கூறியிருக்கிறார்.
பிறகு சிறிது நேரத்திலேயே 65 வயது நபரின் வீட்டிற்கு, போனில் பேசியவர் பொலிஸ் அதிகாரி யூனிபார்முடன் வீடியோகாலில் வந்துவிட்டார்.
தம்பதி இருவரிடம் பேசிய பொலிஸ் அதிகாரி, "உங்களுக்கு பயங்கரவாதிகளுடன் தொடர்புள்ளதால், உங்களையும், உங்கள் மனைவியையும் டிஜிட்டல் கைது செய்துவிட்டோம். இருவரும் வெளியே செல்லக்கூடாது. வீட்டின் வெளியே துப்பாக்கிகளுடன் பொலிஸ் கண்காணிப்பில் உள்ளனர். நீங்கள் வீட்டைவிட்டு வெளியேறினால் துப்பாக்கியால் சுட்டு விடுவார்கள்.
உங்கள் பேங்க் அக்கவுண்ட்டில் உள்ள ரூ.18 லட்சத்தை, நாங்கள் சொல்லும் வங்கி கணக்கிற்கு அனுப்ப வேண்டும். அங்கே உங்களது பணம் முழுமையாக சோதனை செய்யப்படும். எந்த வில்லங்கமும் இல்லையென்றால், அந்த பணம் உங்கள் வங்கி கணக்கிற்கு அனுப்பி வைத்துவிடுவோம்..
ஆனால், நீங்கள் பணத்தை அந்த வங்கி கணக்குக்கு அனுப்பும் வரை வீடியோ காலில் இருக்க வேண்டும்.. எக்காரணம் கொண்டும் வீடியோ கோலை துண்டிக்கக்கூடாது" என்று மிரட்டியுள்ளார்.
இதைக்கேட்டு தம்பதி இருவருமே நடுநடுங்கி போயுள்ளனர். உடனே அந்த பொலிஸ் அதிகாரி, செல்போனில் வீடியோ கோல் செய்து, சில பொலிஸ் அதிகாரிகளை தம்பதியினரிடம் பேச வைத்தார்..
அந்த நபர்களும், வங்கி கணக்கு ஒன்றை தந்து, உடனே 18 லட்சத்தையும் அனுப்பி வைக்குமாறு மிரட்டி கொண்டேயிருந்துள்ளனர். வயதான தம்பதி இருவருமே அறையை விட்டு வெளியே வர முடியாமல் தவித்துள்ளனர். பாத்ரூமுக்கு போக வேண்டும் என்று சொல்லியும்கூட அவர்களை பொலிஸ் அதிகாரி விடவில்லையாம்.
இப்படி இரவெல்லாம் விடிய விடிய தூங்காமலும், வெளியே வர முடியாமலும் தம்பதி இருவரும் அறைக்குள்ளேயே தவித்து கொண்டிருந்தனர். ஆனால், தங்களது 18 லட்சம் பணத்தை மட்டும், அவர்கள் சொன்ன வங்கி கணக்கிற்கு அனுப்பவில்லை..
இதனிடையே தம்பதி இருவரும் 2 நாட்களாகவே வெளியே வராமல் உள்ளதால், அக்கம் பக்கத்தினருக்கு சந்தேகம் வந்தது.. கதவையும் திறக்காததால், உடனடியாக பொலிஸதருக்கு தகவல் தெரிவித்தனர். இதன்பேரில் விரைந்து வந்த ராமநாதபுரம் பொலிஸார், கதவை தட்டி பொலிஸார் வந்திருப்பதாக சொன்னார்கள்,.
அப்போது தம்பதி இருவரும், மும்பை பொலிஸ் தங்களை டிஜிட்டல் கைது செய்துவிட்டார்களாம், வெளியே வந்தால் சுட்டு விடுவதாக சொன்னார்கள், அதனால்தான் வரவில்லை என்று அச்சத்துடன் கூறினார்கள்.
இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பொலிஸ் ர் அப்படி யாரும் டிஜிட்டல் கைது செய்ய முடியாது. வெளியே துப்பாக்கியுடன் பொலிஸ் யாரும் இல்லை என்று கூறி அவர்களை சமாதானப்படுத்தி, தம்பதி இருவரையும் வெளியே அழைத்து வந்தனர்.. அங்கு யாருமே இல்லை என்றதும்தான் தம்பதிக்கு உயிரே வந்தது.
தம்பதியினரை டிஜிட்டல் கைது என்ற பெயரில் மிரட்டப்பட்டதாக தகவல் கிடைத்ததுமே சைபர் கிரைம் பொலிஸாரும் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
பிறகு தம்பதியினரிடம், டிஜிட்டல் கைது என்று எதுவும் இல்லை.. இதெல்லாம் பணம் பறிப்பதற்கான மோசடி கும்பலின் வேலை என்று சமாதானம் செய்தனர். அதற்கு பிறகே தம்பதியினர் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
ஆனால், 2 நாட்களாக தூங்காமல் விடிய விடிய பயத்தில் இருந்தாலும், பணத்தை மட்டும் அனுப்பாமல் இருந்ததால், 18 லட்சமும் தப்பியிருக்கிறது
7 minute ago
25 minute ago
34 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
25 minute ago
34 minute ago