Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2016 ஜனவரி 22 , மு.ப. 08:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
மித்தெனிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காரியடித்த பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற நபரொருவரை கழுத்து வெட்டிக்கொலை செய்தமை தொடர்பான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்று வியாழக்கிழமை காலை 8 மணியளவில், மித்தெனிய பொலிஸாருக்கு உயிரிழந்தவரின் சகோதரர் வழங்கிய முறைப்பாட்டுக்கு அமையவே பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.
இச்சம்பவத்தில் ஷமில் பிரசன்ன என்ற 30 வயதுடைய ஆணொருவரே உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, இச்சம்பவம் இடம்பெற்ற இடத்திலிருந்து 500 மீற்றர் தொலைவில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமொன்று பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் உயிரிழந்தவர் 48 வயதான சந்திரசிறி என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இக்கொலைச் சம்பவத்துக்கும் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக இருப்பவருக்கும் இடையில் ஏதேனும் தொடர்புகள் இருக்கக் கூடும் என பொலிஸார் சந்தேகிப்பதாகவும் இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.
4 minute ago
10 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
10 minute ago