2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

கழிவுத்தேயிலையுடன் இருவர் கைது

Gavitha   / 2016 ஜனவரி 11 , மு.ப. 03:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பலாங்கொட, ஆதாதொல பகுதியிலிருந்து சுமார் 7,985 கிலோகிராம் கழிவுத்தேயிலையை நேற்று ஞாயிற்றுக்கிழமை (10) கைப்பற்றியதாக பொலிஸ் அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.

பொலிஸ் அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போது, இந்தத் தொகை தேயிலை கைப்பற்றப்பட்டதாவும் இதனுடன் தொடர்புடை இரண்டு பேரை கைது செய்தாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

பொலிஸ் அதிரடிப்படையினர் நேற்று திடீர் சுற்றிவளைப்பொன்றை மேற்கொண்டுள்ளனர். இதன்போது, லொறியொன்றில் சுமார் 3,204 கிலோகிராம் கழிவுத் தேயிலையைக் கொண்டுச் சென்ற ஒருவரை கைது செய்துள்ளனர்.

பின்னர், அவர்களிடம் இருந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, அதே பிரதேசத்திலுள்ள களஞ்சியசாலையில் மேலும் கழிவுத் தேயிலைகள் இருப்பது தொடர்பான தகவல்கள் தெரியவந்துள்ளன.

பின்னர் சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார், அங்கிருந்து சுமார் 4,781 கிலோகிராம் கழிவுத் தேயிலையை கைப்பற்றியதுடன், அதனுடன் தொடர்புடைய ஒருவரையும் கைது செய்துள்ளனர்.

இது  தொடர்புடைய மேலதிக விசாரணைகளை அம்பலாங்கொட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X