Janu / 2026 பெப்ரவரி 05 , மு.ப. 10:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுமார் 1 கோடி ரூபாய் பெறுமதியுடைய "குஷ்" போன்ற போதைப்பொருளொன்றை நாட்டிற்குள் கொண்டு வந்து கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து வெளியேற முயன்ற இலங்கை விமானப் பயணி ஒருவர் வியாழக்கிழமை (05) அதிகாலை விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபர் கொழும்பு 12 பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதுடைய வர்த்தகர் என தெரியவந்துள்ளது.
சந்தேக நபர் மலேசியாவின் கோலாலம்பூரிலிருந்து இலங்கை ஏர்லைன்ஸ் விமானம் UL-319 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்திருந்தார்.
அவரது பயணப்பையிலிருந்து குஷ் போதைப்பொருளுக்கு நிகரான போதைப்பொருள் 1 கிலோ 10 கிராம் பொதி செய்யப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த போதைப்பொருளை மேலதிக விசாரணைகளுக்காக கொழும்பு ஆபத்தான மருந்துகள் வாரியத்திற்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் சந்தேக நபர் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, தடுத்து வைத்து விசாரணைக்குட்படுத்தபடவுள்ளார்.
டி.கே.ஜி. கபில

அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .