Editorial / 2025 மே 15 , மு.ப. 11:24 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை சேர்ந்த இருவர், காத்தான்குடி நகர சபையின் தவிசாளர், பிரதி தவிசாளராக நியமிக்கப்பட்டுள்ளனர்.
தவிசாளராக எஸ்.எச்.எம்.அஸ்பர், பிரதித் தவிசாளராகவும் எம்.ஐ.எம்.ஜெஸீம் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர்களின் நியமனங்கள் தொடர்பாக, கட்சியின் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி ,பாராளுமன்ற உறுப்பினர் நிசாம் காரியப்பர், மட்டக்களப்பு மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலருக்கு அறிவித்துள்ளார்.
எஸ்.எச்.எம்.அஸ்பருக்கான நியமன கடிதம், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் ,பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா ஆகியோர் முன்னிலையில் "தாருஸ்ஸலாம்" தலைமையகத்தில் புதன்கிழமை (14) மாலை கையளிக்கப்பட்டது.
இத்தேர்தலில் காத்தான்குடி நகரசபையில், தேசிய மக்கள் சக்தியைத் தவிர, தனிக் கட்சியாக 50 சதவீதத்தை கடந்து இந்த உள்ளூராட்சி சபையைக் கைப்பற்றியுள்ள கட்சியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் திகழ்வது குறிப்பிடத்தக்கது.
56 minute ago
1 hours ago
1 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
56 minute ago
1 hours ago
1 hours ago
4 hours ago