Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
Editorial / 2018 பெப்ரவரி 07 , மு.ப. 10:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொலன்னாவை, மீத்தொட்டமுல்ல பிரதேசத்தில் குப்பைமேடு சரிந்து விழுந்ததன் காரணமாக ஏற்பட்ட அனர்த்தம் தொடர்பாக கண்டறிவதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணைக்குழுவின் இறுதி அறிக்கை, ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் நேற்று (06) கையளிக்கப்பட்டது.
குழுவின் தலைவர் ஓய்வு பெற்ற நீதியரசர் கலாநிதி சந்தரதாச நாயணக்காரவால் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டதுடன், குழுவின் செயலாளர் டி.எம்.கருனாரத்ன, அதிகாரி பாலித்த அபேவர்த்தன ஆகியோர் இதன்போது கலந்துகொண்டனர்.
மீத்தொட்டமுல்ல குப்பைகளை அகற்றுவதுத் தொடர்பாக குறுகியகால நீண்டகால பரிந்துரைகள் குழுவின் அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ளதுடன், மேல் மாகாணத்தில் குப்பைகள் அகற்றும் நடவடிக்கைகளை முகாமைத்துவம் செய்வதற்கான மத்திய நிறுவனமொன்றை ஸ்தாபிப்பதன் முக்கியத்துவம் குறித்தும் சுட்டிக்காட்டப்பட்டது.
மேலும், குப்பைகளை அகற்றும் முகாமைத்துவம் செய்வதற்கான முறைமைகளை அமைக்க வேண்டியதன் அவசியம் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளதுடன், இக்குழுவின் அறிக்கைகேற்ப குறித்த பரிந்துரைகள் மற்றும் முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்துவற்கு எதிர்காலத்தில் குறித்த அமைச்சுகள், நிறுவனங்களுக்குப் பணிப்புரைகள் வழங்கப்படும் என்று ஜனாதிபதி தெரிவித்தார்.
கொலன்னாவை, மீத்தொட்டமுல்ல குப்பைகளை அகற்றும் நடவடிக்கைக்காக வெளி நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ள நிதி 2015ஆம் மற்றும் 2016ஆம் ஆண்டு காலப்பகுதியில் அசாதாரணமான வகையில் அதிகரித்திருப்பாக குழுவின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கொழும்பு மாநகர சபையால் 2014ஆம் ஆண்டு இதற்காக மேற்கொள்ளப்பட்ட செலவு 64 மில்லியன் ரூபாயாகும் என்பதுடன், 2015ஆம் ஆண்டில் 182 மில்லியன் ரூபாயும் 2016ஆம் ஆண்டில் 232 மில்லியன் ரூபாயாகவும் அக்கொடுப்பனவு அதிகரித்திருப்பாகவும் தெரியவந்துள்ளது.
மேலும், ஆரம்பம் முதலே இந்தக் குப்பைகளை அகற்றுவது தொடர்பாக கொழும்பு மாநகர சபையால் முறையான நிகழ்ச்சித்திட்டமொன்று பின்பற்றப்படாமையில் தீர்வுகளாக முன் வைக்கப்பட்ட முன்மொழிவுகள் உரிய முறையில் நடைமுறைப்படுத்தப்படாமையும் இந்த அனர்த்தத்துக்கு காரணமாகுமென்றும் அந்த அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
9 minute ago
18 minute ago
22 minute ago