2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

‘குளிர் மற்றும் மழையுடனான வானிலை தொடரும்’

Editorial   / 2018 டிசெம்பர் 31 , பி.ப. 02:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டின் வடக்கு, கிழக்கு, மத்திய மற்றும் வடமேற்கு  ​பகுதிகளில் அடுத்த சில தினங்களுக்கு குளிருடனான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களத்தால் எதிர்வுக்கூறப்பட்டுள்ளது.

அத்தோடு, நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழையுடனான வானிலையும் நிலவும் என்பதோடு, இதன்படி பதுளை மற்றும் மாத்தளை ஆகிய மாவட்டங்களில் இந்நிலை தொடருமென எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மன்னாரிலிருந்து புத்தளம் மற்றும் கொழும்பின் ஊடாக களுத்துறை வரையில், கடற்கரை பிரதேசங்களில் காற்றின் வேகம் மணிக்கு 50 தொடக்கம் 60 கிலோமீற்றர் வரை வீசக்கூடுமென்றும், இதனால் மீன்பிடி நடவடிக்கைகள் மற்றும் கடற்றொழில்களில் ஈடுபடுவோர் மிகவும் அவதானமாக செயறடபடுமாறும் கோரப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .