Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 03, வியாழக்கிழமை
Editorial / 2019 பெப்ரவரி 25 , மு.ப. 05:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் கூட்டணி யொன்றை அமைப்பதற்கு, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மேற்கொள்ளும் முயற்சிகளை நியாயப்படுத்தியுள்ள ஜனாதிபதியும் சு.கவின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன, கூட்டணிகளின்றித் தேர்தல்களில் வெற்றிபெற முடியாதெனவும் தெரிவித்துள்ளார்.
தமிழ்மிரரின் சகோதரப் பத்திரிகையான சண்டே டைம்ஸுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இக்கருத்தை வெளியிட்டுள்ளார்.
கூட்டணிகளை உருவாக்காதோர், அரசியலில் அனுபவம் இல்லாதவர்களாகவே காணப்பட்டனரெனத் தெரிவித்துள்ள ஜனாதிபதி, தேர்தலில் வெற்றிபெற வேண்டுமாயின், ஒற்றுமைப்படுத்த வேண்டுமெனத் தெரிவித்துள்ளதோடு, கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகளை, சுமார் ஒரு மாதகாலமாக மேற்கொண்டு வருவதாகவும் பொதுவான கூட்டணியொன்றை உருவாக்க, இன்னும் ஒரு மாதமோ அல்லது இரண்டு மாதமோ எடுக்குமெனவும் தெரிவித்துள்ளார்.
அவ்வாறான கூட்டணியொன்று உருவாக்கப்பட்ட பின்னர், அதன் ஜனாதிபதி வேட்பாளராகும் நம்பிக்கையைக் கொண்டுள்ளீர்களா என்று கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளித்துள்ள ஜனாதிபதி, அது குறித்து இன்னமும் கலந்துரையாடப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
அத்துடன்,ஐ.தே கவையும் விமர்சித்துள்ள ஜனாதிபதி, அக்கட்சி, தூய்மையான கட்சியல்ல என்றும் ஊழலின்றி அவர்கள் இருந்தார்களெனில், அவர்களோடு இணைந்து பணியாற்றியிருக்க முடியுமென்றும் தெரிவித்துள்ளார்.
நாட்டில் தற்போது காணப்படும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு சிறந்த வழி, நாடாளுமன்றத் தேர்தலே ஆகுமெனச் சுட்டிக்காட்டியுள்ள ஜனாதிபதி, தற்போதைய நாடாளுமன்றம் ஸ்திரமாக இல்லையெனவும் மேலும் தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
4 hours ago
4 hours ago