Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 14, திங்கட்கிழமை
Editorial / 2018 ஒக்டோபர் 26 , மு.ப. 11:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
பா.நிரோஸ்
கூட்டு ஒப்பந்தம் தொடர்பில் பிரமதர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும், கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் மூன்று தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும் இடையில், முக்கியச் சந்திப்பொன்று நாடாளுமன்றத்தில் நேற்று (25) இடம்பெற்றுள்ளது எனத் தெரியவருகிறது.
ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்களான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம், பெருந்தோட்டத் தொழிற்சங்கக் கூட்டமைப்பு ஆகியவற்றின் பிரதிநிதிகளே, இந்தச் சந்திப்பில் பங்கேற்றனர் என, தொழிற்சங்கத் தகவல்கள் தெரிவித்தனர்.
இ.தொ.காவின் சார்பில் பிரதியமைச்சர் முத்து சிவலிங்கம், நுவரெலியா மாவட்ட எம்.பி நாடாளுமன்ற உறுப்பினர் ஆறுமுகன் தொண்டமான், ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான், இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் பதுளை மாவட்ட எம்.பி வடிவேல் சுரேஷ், பெருந்தோட்டத் தொழிற்சங்கக் கூட்டமைப்பின் சார்பில் எஸ்.இராமநாதன் உள்ளிட்ட உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர்.
இதன்போது மேற்படி உறுப்பினர்கள், பெருந்தோட்டத் தொழிலாளர்கள் தற்போது எதிர்கொண்டுவரும் பொருளாதாரப் பிரச்சினை தொடர்பிலும், தோட்டக் கம்பனிகள் 1,000 ரூபாய் அடிப்படைச் சம்பளத்தை வழங்குவதன் அவசியம் தொடர்பிலும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் எடுத்துரைத்துள்ளதுடன், கூட்டு ஒப்பந்த விடயத்தில், பிரதமரின் தலையீடு அவசியம் என்பதையும் வலியுறுத்தியுள்ளனர்.
இதற்குப் பதிலளித்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பெருந்தோட்டத்துறையுடன் தொடர்புடைய அமைச்சர் நவீன் திஸாநாயக்க வெளிநாடு சென்றுள்ளார் என்றும், எனவே அவர் நாடு திரும்பியதுடன், அவருடன் இணைந்து பேச்சுவார்த்தையை முன்னெடுப்பதாகவும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
9 hours ago
9 hours ago
13 Jul 2025