Editorial / 2025 ஓகஸ்ட் 28 , பி.ப. 02:23 - 0 - {{hitsCtrl.values.hits}}

சண்முகம் தவசீலன்
கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கு முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை (28) முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில் வழக்கு மீண்டும் நவம்பர் மாதம் ஆறாம் திகதிக்கு தவணை இடப்பட்டுள்ளது
இதன்போது குறித்த புதைகுழியில் மீட்கப்பட்ட சான்று பொருட்கள் தொடர்பில் உறவினர்கள் அடையாளம் காட்டுவதற்கான விளம்பரங்கள், காணாமல் போனோர் அலுவலகத்தால் ஊடகங்களில் பிரசுரிக்கப்பட்டு இருப்பதாகவும் இது தொடர்பான அறிக்கைகள் நீதிமன்றுக்கு சமர்ப்பிப்பதற்கு கால அவகாசம் தேவை என கோரப்பட்டதற்கு அமைவாக குறித்த வழக்கு நவம்பர் மாதம் 6 ஆம் திகதிக்கு தவணை இடப்பட்டுள்ளது
முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப் பணி நிறைவில் 52 மனித எச்சங்கள் மீட்கப்பட்டிருந்தது. அகழ்வுப் பணியும் நிறைவு செய்யப்பட்டிருந்தது
இதனைத் தொடர்ந்து அகழ்வு பணியில் ஈடுபட்டிருந்த பேராசிரியர் ராஜ் சோமதேவவினால் நீதிமன்றத்திற்கு முழுமையான அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருந்தது
அத்தோடு சட்ட வைத்திய அதிகாரிகளால் குறித்த மனித எச்சங்கள் தொடர்பில் செய்யப்பட்ட ஆய்வுகளின் இறுதி அறிக்கையும் நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டிருந்தது
இவ்வாறான பின்னணியில் குறித்த சான்றுப் பொருட்கள் தொடர்பான தகவல்கள் தெரிந்தவர்களை தொடர்பு கொண்டு அது தொடர்பில் தகவல்களை வழங்குமாறு 2025.08.03 அன்று காணாமல் போனோர் அலுவலகத்தினால் ஊடகங்களில் குறித்த விடயங்கள் வெளியிடப்பட்டு மக்களிடமிருந்து குறித்த விடயங்கள் தொடர்பான தகவல்கள் தெரிந்தவர்கள் தகவல் வழங்குமாறு கோரப்பட்டிருந்தது
இவ்வாறான பின்னணியில் இதனுடைய இறுதி அறிக்கைகள் நீதிமன்றத்திற்கு சமர்ப்பிப்பதற்கு கால அவகாசம் தேவை என்ற அடிப்படையில் குறித்த வழக்கு நவம்பர் மாதம் ஆறாம் திகதிக்கு தவணை இடப்பட்டுள்ளது.
11 minute ago
19 minute ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
19 minute ago
4 hours ago