Editorial / 2020 டிசெம்பர் 09 , மு.ப. 03:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி, மரணமடைந்தோரின் எண்ணிக்கை 142ஆக அதிகரித்துள்ளது. அதில், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இருந்த ஹோமாகம வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட 62 வயதானவர், டிசெம்பர் 7ஆம் திகதி மரணமடைந்தார்.
கொவிட்-19 நிமோனியா காரணமாக மரணமடைந்தார். அவரது மரணம் 141ஆக பதிவாகியுள்ளது என அரசாங்கத் தகவல் திணைக்களம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்து.
எனினும், அவருடைய வதிவிடம் சரியாக கண்டறியப்படவில்லை என, அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், 142ஆவது நபர், கொழும்பு ஜெம்பட்டா வீதியைச் சேர்ந்தவர் ஆவார். 77 வயதான அவரும் ஹோமாகம வைத்தியசாலையிலேயே மரணமடைந்துள்ளார். கொவிட்-19 மற்றும் நீரிழிவுடன் ஏற்பட்ட இரத்தம் நஞ்சானமை காரணமாகவே, அவர் மரணமடைந்துள்ளார் என்றும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்றுமுன்தினம் (07) அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கைஇ 703 ஆகும். அதில், 371 பேர் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். அதில், பொரளையில் 182 பேரும் வௌ்ளவத்தை பிரதேசத்தில் 22 பேரும் அடங்குகின்றனர்.
இதேவேளை, கம்பஹா மாவட்டத்தில் 102 பேரும் நுவரெலியா மாவட்டத்தில் 22 பேரும் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒருவரும் அடங்குவதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டள்ளது.
இந்நிலையில், நாட்டில் இதுவரை 28,579 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
2 hours ago
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
21 Dec 2025