2025 மே 12, திங்கட்கிழமை

கொழும்பில் 10 வெசாக் தோரணங்கள்

Editorial   / 2025 மே 12 , மு.ப. 10:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

 பக்தியுடன் கொண்டாடப்படும் வெசாக் போயாவில் கொழும்பு நகரில் சுமார் பத்து கண்கவர் வெசாக் பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பேலியகொடையில் உள்ள நவலோக்க,   தொட்டலங்க, பலாமர சந்தி (கொஸ்கஸ் சந்தி), பொரள்ளை, தெமட்டகொடையில் உள்ள கேம்பல் பீல்ட் அருகே, பௌத்தாலோக மாவத்தையில் பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்திற்கு அருகில், புறக்கோட்டையில் உள்ள போதி மரத்திற்கு அருகில், ஹுனுபிட்டியவில் உள்ள கங்காராமய விஹாரையில், கொழும்பு 02, ப்ரேப்ரூக் பிளேஸில் உள்ள சிரச தலைமையகத்தில் பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்கு மேலதிகமாக, கொழும்பு நகரில் பல வெசாக் வலயங்கள் உள்ளன.

ஹுணுபிட்டிய கங்காராமய விகாரையில் உள்ள புத்த ரஷ்மி வெசாக் வலயம், பௌத்த மகா சம்மேளனத்தில் உள்ள பௌத்தாலோக மாவத்தை வெசாக் வலயம் மற்றும் ப்ரேபுரூக் பிளேஸில் உள்ள சிரச வெசாக் வலயம் ஆகியவை அந்த வெசாக் வலயங்களில் அடங்கும். வெசாக் போயா தினத்தையொட்டி நாடு முழுவதும் பல கண்கவர் வெசாக் பந்தல்கள் மற்றும் வெசாக் வலயங்கள் உள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X