Editorial / 2025 ஓகஸ்ட் 26 , மு.ப. 09:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு, கோட்டை நீதவான் நீதிமன்ற வளாகத்தில் பல அடுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
நீதிமன்றத்துக்கு நுழையும் பிரதான வீதியின் இரு பக்கங்களும் இரும்பு வேலிகள் போட்டு பொலிஸார் மறித்துள்ளனர். அத்துடன் போக்குவரத்து பொலிஸாரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அதுமட்டுமன்றி குறுக்கு வீதிகளும் இரும்பு வேலிகள் போட்டு மறிக்கப்பட்டுள்ளன. நீதிமன்ற வளாகத்தில் இருக்கும் குடியிருப்புகள், வியாபார நிலையங்கள் மற்றும் வேலைத்தங்களுக்கு செல்வோர் மட்டுமே உள்நுழைய அனுமதிக்கப்படுகின்றனர்.
அத்துடன், நீதிமன்றத்துக்கு செல்வோர் கடுமையான உடல் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். ஏனையோரை செல்வதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது.
அரச நிதியை முறைகேடாக பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில், கடந்த வெள்ளிக்கிழமை (22) கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இன்று (26) வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அவர், இன்றைய தினம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ள நிலையில் இவ்வாறு, கோட்டை நீதவான் நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது,
12 minute ago
26 minute ago
41 minute ago
58 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
26 minute ago
41 minute ago
58 minute ago